பங்களாதேஷில் பயங்கர தீவிபத்து... 45 பேர் உயிரிழந்த பரிதாபம்...

Mar 1, 2024 - 20:18
பங்களாதேஷில் பயங்கர தீவிபத்து... 45 பேர் உயிரிழந்த பரிதாபம்...

வங்கதேசத்தில் 7 மாடிகள் கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள 7 மாடிகள் கொண்ட கட்டடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. அந்தக் கட்டடத்தில் மேலும் சில ஹோட்டல்கள், துணிக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

பின்னர் கட்டடத்திற்குள் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அவர்களில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் 45 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow