குட்டி கோலி வந்தாச்சு..விராட் கோலிக்கு ஆண் குழந்தை..! பெயர் என்னனு தெரியுமா..?

இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவர்களான கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Feb 21, 2024 - 07:38
குட்டி கோலி வந்தாச்சு..விராட் கோலிக்கு ஆண் குழந்தை..! பெயர் என்னனு தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் விளம்பர படங்களில் ஒன்றாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்களின் திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது. 

திருமணத்திற்கு பிறகு, அனுஷ்கா ஒரு வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. அப்போது விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், தன்னுடைய மனைவியின் முதல் பிரசவத்திற்காக பாதியில் தொடரிலிருந்து வெளியேறி இருந்தார்.

திருமணத்திற்கு பின் அனுஷ்கா ஷர்மா, தனது கணவர் கோலி பங்கேற்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் கடந்த சில மாதங்களாக அனுஷ்கா சர்மாவை பார்க்கவே முடியவில்லை. இதற்கிடையே,  அனுஷ்கா சர்மா 2 ஆவது முறையாக கர்ப்பம் அடைந்திருந்தார். இதுபற்றிய தகவல்கள் அதிகம் வெளிவராத நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக பயிற்சி செய்ய ஐதராபாத்துக்கு வந்திருந்த விராட் கோலி திடீரென்று தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக கூறி வெளிநாடு சென்று விட்டார். 

இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனிடையே சில நாட்களுக்கு முன், பிரபல கிரிக்கெட் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ்  விராட் கோலி - அனுஷ்கா சர்மா தங்களது 2 ஆவது குழந்தையை வரவேற்க தயாராகி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு, தான் தவறான கருத்தை கூறிவிட்டதாக சொல்லி மன்னிப்பு கேட்டார். இதனால் விராட் கோலி அனுஷ்கா சர்மாவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “பிப்ரவரி 15 ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அளவற்ற மகிழ்ச்சியுடனும், நெஞ்சம் நிறைந்த அன்புடனும் இதனை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மகனுக்கு அகாய் (Akaay) என்று பெயர் வைத்துள்ளோம். எங்கள் மகள் வாமிகாவின் தம்பி இந்த உலகுக்கு வந்து விட்டார்! எங்கள் வாழ்க்கையின் இந்த அழகான தருணத்தில் உங்களது வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறோம். இந்த நேரத்தில் எங்களது தனியுரிமைக்கு மதிப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு விராட் கோலி பதிவிட்டிருக்கிறார்.

விராட் கோலிக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குட்டி கோலி வந்துவிட்டதாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow