Coolie: கூலி டைட்டில் டீசர் கொடுத்த நம்பிக்கை… லோகேஷ் சம்பளம் பல கோடி… மெகா ஆஃபர் தான் போங்க!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் சம்பளம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.
சென்னை: மாநகரம் மூவி மூலம் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், குறுகிய காலத்தில் கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநராக வலம் வருகிறார். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என லோகேஷின் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் கோடிகளில் வசூல் செய்தன. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினியே லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதாவது தனது கடைசிப் படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என ரஜினி கூறியதாகவும் சொல்லப்பட்டது.
இதெல்லாம் வதந்தி என சிலர் கூறினாலும், திடீரென தலைவர் 171 அப்டேட்டை வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதன்படி, ரஜினி, லோகேஷ், அனிருத் கூட்டணியில் தலைவர் 171 உருவாகும் என்பது உறுதியானது. அதேவேகத்தில் கடந்த 22ம் தேதி தலைவர் 171 டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டது. தலைவர் 171 டைட்டில் டிஸ்கோ என லீட் கொடுத்து கடைசியில் கூலி என அபிஸியலாக அறிவிக்கப்பட்டது. அதோடு ப்ளாக் & ஒயிட் ரெட்ரோ ஸ்டைலில் கோல்ட் காம்போ, ரஜினியின் ஆக்ஷன் என கூலி டீசர் செம்ம மாஸ் காட்டியது.
இந்தப் படத்தில் கஞ்சா கடத்தல் இல்லை என லோகேஷ் ஏற்கனவே அப்டேட் கொடுத்துவிட்டார். ஆனால் டீசரை பார்த்தால் கஞ்சாவுக்குப் பதிலாக தங்கக் கடத்தலை வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்துள்ளார் லோகேஷ். தனது கதையில் எதை கடத்தினாலும், ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்து அவர்களை திரையரங்குகளுக்கு கடத்திக்கொண்டு வரும் வித்தை தெரிந்தவர் லோகேஷ். இதனால் முதலுக்கு மோசம் வராது என்பது ரஜினிக்கும் சன் பிக்சர்ஸுக்கும் தெரியாமல் இருக்காது.
பாக்ஸ் ஆபிஸ் பந்தயத்தில் ஜெயிக்கிற குதிரையாகவும் பொன் முட்டையிடும் வாத்தாகவும் வலம் வரும் லோகேஷுக்கு சம்பள விஷயத்தில் தாராளம் காட்டப்பட்டுள்ளதாம். அதாவது இதுவரை லோகேஷ் மட்டுமல்ல, கோலிவுட்டில் எந்த இயக்குநர்களும் வாங்காத பெரிய தொகையை லோகேஷுக்கு சம்பளமாக பேசி முடித்துவிட்டதாம் சன் பிக்சர்ஸ். அதன்படி கூலி படத்துக்காக 60 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம் லோகேஷ். இது பாலிவுட்டில் ஆயிரம் கோடி வசூலித்த அட்லீ, அவரது குரு ஷங்கர் ஆகியோரது சம்பளத்தை விட அதிகம் என சொல்லப்படுகிறது.
What's Your Reaction?