தேர்தல் பிரசாரத்தில் இருந்து திடீர் விலகல்.. Vote4INDIA என குஷ்பு போட்ட ட்வீட்.. பாஜக தலைமை மீது அதிருப்தியா?

ஓட்டு போட்ட கையோடு குஷ்பு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது அனல் பறக்கும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜக தேர்தல் பிரசாரத்தில் இருந்து பாதியில் விலகிய குஷ்பு Vote4INDIA என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 19, 2024 - 11:53
Apr 19, 2024 - 15:18
தேர்தல் பிரசாரத்தில் இருந்து திடீர் விலகல்.. Vote4INDIA என குஷ்பு போட்ட ட்வீட்.. பாஜக தலைமை மீது அதிருப்தியா?

பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று வாக்களித்தார். 

நடிகை குஷ்பு உடன் அவரது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களும் சென்றும் வாக்களித்தார்கள். பின்னர் தேர்தல் ஆணையம் வைத்திருந்த ஓட்டு போடுங்க.. போட்டோ எடுங்க, போஸ்ட் போடுங்க என்ற செல்பி ஸ்டாண்டில் குஷ்பு தனது கணவருடன் செல்பி  எடுத்தார்.

குஷ்பு தான் வாக்களித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த பதிவில் குஷ்பும் சுந்தர்சியும் வாக்களித்த புகைப்படங்கள்இருந்தன. இந்த புகைப்படத்தில் குஷ்பு போட்ட ஹேஷ்டேக் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை குஷ்பு #Vote4INDIA என்ற ஹேஷ்டேக் போட்டிருக்கிறார். அதேபோல் #VoteFor400Paar என்ற ஹேஷ்டேக் போட்டிருக்கிறது. இதில் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக் போட்டதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

பாஜக நிர்வாகியாக உள்ள குஷ்பு எதற்காக #Vote4INDIA என்று போட வேண்டும்.. இந்தியா கூட்டணியினர் தான் #Vote4INDIA என்ற ஹேஷ்டேக்கை கடந்த ஒரு வாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், #Vote4INDIA என்ற ஹேஷ்டேக்கை எதற்காக போட வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த ட்வீட் பற்றி  குஷ்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.. இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அப்படி போட்டாரா அல்லது என்ன காரணம் என்பதை குஷ்பு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.. அப்போது தான் உண்மை தெரியும் என்கிறார்கள் சில நெட்டிசன்கள்.

அதே நேரத்தில் இந்தியாவை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.. பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர் திமுக ஆதரவாளர்கள். பாஜக வை தூக்கி வீசிய அக்கா குஷ்புக்கு வாழ்த்துக்கள் என்றும் காங்கிரஸ் திமுக ஆதரவாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது உடல் நிலையை காரணம் காட்டி பாதியில் விலகினார் குஷ்பு. இந்த நிலையில்தான் #Vote4INDIA என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு. பாஜக தலைவர்கள் யாருமே இந்தியா கூட்டணியை INDI கூட்டணி என்றுதான் கூறுவார்கள். இப்போது குஷ்பு பதிவிட்டுள்ளது பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை பலருக்கும் எழுப்பியுள்ளது. என்ன விளக்கம் தரப்போகிறார் குஷ்பு பொருத்திருந்து பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow