4 தொழிற்பேட்டைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வர வேண்டும்.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்...
கோவையில் அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகளையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துணைமின் நிலையங்கள், சாலைகள் போன்ற பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளும் இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் (கொடிசியா), இரண்டு தொழிற் பூங்காக்கள், கோவை சிகோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் (கோசிமா) தொழிற்பேட்டை ஆகியவற்றில் மூன்று மாதங்களில் பொதுவான உள் கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்படும் என கோவை மாவட்ட தொழில் மையம் முன்னதாகக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாரப்பட்டியில் அறிவிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்காவிலும் பணிகள் தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொழில் தொடங்க ஒற்றாச்சாளர முறையில் விண்ணப்பித்தவர்களுக்கும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
What's Your Reaction?