மக்களவைத் தேர்தல்.. தமிழகத்தில் காலை முதலே விறுவிறுப்பு.. வாக்களிக்க ஆர்வம் காட்டும் மக்கள்

மக்களவைத் தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  மக்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்

மக்களவைத் தேர்தல்.. தமிழகத்தில் காலை முதலே விறுவிறுப்பு.. வாக்களிக்க ஆர்வம் காட்டும் மக்கள்

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் இன்று முதற்கட்டமாக தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமன்றி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ( ஏப்ரல் 19) நடைபெறும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அனைவரும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடையும் எனவும், கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் அளிக்கப்பட்டு அவா்களும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow