ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருத்தணி - சென்னை கடற்கரை ரயில் சேவையில் சின்ன மாற்றம்

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னை கடற்கரை திருத்தணி மின்சார ரயிலானது சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்து உள்ளது.

Apr 12, 2024 - 17:42

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்திற்கும் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 11: 15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை இரண்டு மணி நேரங்கள் அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய இரண்டு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்திருப்பதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து காலை 8 50 மணி அளவில் புறப்படும் திருத்தணி சென்னை கடற்கரை மின்சார ரயிலானது நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 12:10 மணி அளவில் புறப்படும் சென்னை கடற்கரை திருத்தணி மின்சார ரயிலானது சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்து உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow