மாரடைப்பால் உயிருக்கு போராடிய காவலர்... பதறியடித்து முதலுதவி செய்த எம்எல்ஏ... இருந்தும் பலனில்லை...
உயிருக்குப் போராடிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள் முதலுதவி

சேலத்தில் உயிருக்குப் போராடிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலம் குரங்குசாவடி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாபுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காரை ஓரமாக நிறுத்தியுள்ளார். அவரைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றனர். அப்போது அவ்வழியாகச் சென்ற சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.அருள், பாபு-வுக்கு துரிதமாக செயல்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
தொடர்ந்து CPR உதவியால் சிறப்பு உதவி ஆய்வாளர் சற்று நினைவு தெளிந்த நிலையில், அவரை உடனடியாக கார் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ உடனழைத்துச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்தும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?






