எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் ?- கடிதம் கொடுக்க தலைமை செயலகம் விரைந்தார்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் வரும் 27-ந் தேதி, நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தலைமை செயலகத்திற்கு செங்கோட்டையன் சென்று கொண்டு இருக்கிறார்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் எம்.எல்.ஏ., அமைச்சராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். அதிமுகவை ஒருங்கிணை போவதாக செங்கோட்டையன் அறிவித்தார். எடப்பாடி சுற்றுப்பயணம் உள்பட அவரது நிகழ்ச்சிக்களையும் செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார்.
இந்த நிலையில் தேவர் ஜெயந்தி அன்று சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இதன் காரணமாக அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி நீக்கினார்.
இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த செங்கோட்டையன். தனது தங்கை கணவர் மூலம் தவெகவில் இணைய பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், நாளை பனையூரில் தவெக அலுவலகத்தில் விஜயை சந்தித்து தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளார்.
இந்த நிலையில், கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய செங்கோட்டையன் தலைமை செயலகம் விரைந்து கொண்டு இருக்கிறார்.
What's Your Reaction?

