மே 1 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு..! பீர் ஃபேக்டரியையும் மூடிடுவோம்.. லிஸ்ட் போட்ட அன்புமணி..!

Feb 14, 2024 - 17:02
மே 1 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு..! பீர் ஃபேக்டரியையும் மூடிடுவோம்.. லிஸ்ட் போட்ட அன்புமணி..!

மே ஒன்று முதல் மதுக்கடைகளுக்கு பூட்டு, குரியுரிமை சட்டதிருத்தம் செயல்படுத்தப்படாது, மாநிலத்தின் வருவாய் 5 லட்சம் கோடி என நடப்பாண்டுக்கான நிழல்  நிதிநிலை அறிக்கையை பாமக  தலைவர் அன்புமணி அதிரடியாக வெளியிட்டுள்ளார். அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?...

வரவு - செலவு:

*2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,00,180 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது. 
 
சிக்கன நடவடிக்கைகள்:

*2024-25ல் அரசுத் துறைகளுக்கான நிர்வாகச் செலவுகள் 15% குறைக்கப்படும். 
*அமைச்சர்கள் விமானப் பயணம் மேற்கொள்ள, ஆடம்பர விடுதிகளில் தங்க தடை
*அமைச்சர்கள், அதிகாரிகள் அரசுத் துறைகளுக்கு புதிய மகிழுந்துகள் வாங்க தடை


சாதிவாரி கணக்கெடுப்பு:

*தமிழ்நாட்டில் ஜூலை 25ஆம் தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
*சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில் அனைத்து சாதிகளுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும். 
*பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அறிக்கை பெறப்பட்டு, வன்னியர் இடஒதுக்கீடு வழங்கப்படும். 
*தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரையிலான 35 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டின் பயன்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடப்படும். 


மதுவிலக்கு - போதை ஒழிப்பு:
*கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடக்கம்.
*மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும். 
*தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும். 
*குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.


குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூ.5,000 பரிசு:
*குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர்சூட்டும் பெற்றோருக்கு ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும்.
*குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும். 

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்:
*புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, நடப்பாண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும். 
*அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும். 
*இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் கலையப்படும். 


குடியுரிமை சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படாது:
*தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்திருத்தம் (Citizenship (Amendment) Act, 2019) செயல்படுத்தப்படாது.


கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும்:

*கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் முழுமையாக வேறு பேருந்து முனையங்களுக்கு மாற்றப்பட்ட பின், அது பூங்காவாக மாற்றப்படும். 
*கோயம்பேட்டில் அமைக்கப்படும் பூங்கா 66.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும். சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக அது அமையும்.
கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை
*சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். அதற்கான பணிகள் நடப்பாண்டில் தொடங்கும்.

பறக்கும் சாலை திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு:

*தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பறக்கும் சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மாநில ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 
*தாம்பரம் - செங்கல்பட்டு ஆறுவழி உயர்மட்ட சாலை, மதுரவாயல் - திருப்பெரும்புதூர் உயர்மட்ட சாலை, மாதவரம் சந்திப்பு - வெளிவட்டச் சாலை, திருச்சி - துவாக்குடி உயர்மட்ட சாலை ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு.
*தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் மாற்றவும், மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 55லிருந்து 17ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 
*பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

காற்றாலை, சூரியஒளி மின் திட்டங்களுக்கு தனி அமைச்சகம்:

*அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின் திட்டம் செயல்படுத்தப்படும்.
*காற்றாலை, சூரியஒளி மின் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

மாநில கல்விக் கொள்கை:
*தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கை நடப்பாண்டில் வெளியிடப்படும். 
*கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம்:
*தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும்.
*ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60ஆக உயர்த்தப்படும். 


புதிய உயர்கல்வி நிறுவனங்கள்:

*தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:

1.அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக  (Anna University  Institute of Eminence (IoE)) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.

2.பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம்  - இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.

3.சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். 

4.தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) ஏற்படுத்தப்படும். 


மேகதாது அணை தடுக்கப்படும்:
*காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் பணிகள் தடுக்கப்படும்.
*மேகதாது அணை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு மத்திய நீர்வள ஆணையத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதை  எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். 
*முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும். பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும்.

வேளாண் துறைக்கு ரூ.60,000 கோடி:

*2024-25ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
*வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
*வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி செலவிடப்படும். 
*பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.27,500 கோடி செலவிடப்படும். 


முக்கிய பாசனத் திட்டங்கள்:
*காவிரி - தருமபுரி உபரிநீர்த் திட்டம், அரியலூர்: சோழர் பாசனத் திட்டம் ஆகியவற்றுக்கு வரும் ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்படும்.
*தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம், அத்திக்கடவு - அவிநாசித் திட்டம், கொள்ளிடம் தடுப்பணைத் திட்டம் ஆகிய முப்பெரும் திட்டங்களுக்கு ஜூலையில் திறப்புவிழா நடத்தப்படும்.

9 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் - என்எல்சி சுரங்கங்களுக்குத் தடை:

*என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். இதற்காக 25,000 ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது. 
*செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow