ஆணவத்தில் ஆடும் ஆ.ராசாவிற்கு வாக்களிக்காதீர்.. வீட்டுக்கு அனுப்புங்கள்.. நீலகிரியில் எல்.முருகன் கொந்தளிப்பு 

கடவுளையும், பெண்களையும் இழிவுபடுத்தும் ராசாவிற்கு அளிக்கக்கூடாது என்று நீலகிரியில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஆணவத்தில் இருக்கும் ராசாவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.

Apr 16, 2024 - 12:04
ஆணவத்தில் ஆடும் ஆ.ராசாவிற்கு வாக்களிக்காதீர்.. வீட்டுக்கு அனுப்புங்கள்.. நீலகிரியில் எல்.முருகன் கொந்தளிப்பு 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பாஜக சார்பில் நீலகிரியில் போட்டியிடும் எல்.முருகன் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குன்னூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, தாந்தநாடு, கிருஷ்ணாபுரம், கோத்தகிரி பேருந்து நிலையம் மற்றும் சுள்ளிகூடு போன்ற பகுதிகளில் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், "இந்தியாவில் மூன்றாவது முறையாக இந்த தேர்தலில் பாஜக 400 தொகுதிகளின் மேல் ஜெயிப்பது உறுதி. மூன்றாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பதவி ஏற்பார். பொதுமக்கள் ஜெயிக்கும் கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றும் ஊழல் திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் ஊழல் ராசாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆணவத்தில் இருக்கும் ராசாவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். கடவுள் இல்லை என்று பேசி கடவுளை இழிவுபடுத்தும் ராசாவிற்கு நீங்கள் வாக்கு அளிக்கக்கூடாது. பெண்களை இழிவுபடுத்தும் ராசாவிற்கு நீங்கள் வாக்கு அளிக்கக்கூடாது.

பாஜக தேர்தல் அறிக்கையில் தேயிலைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் 36 கோடி லஞ்சம் வாங்கியுள்ளதாக நகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் பேசியுள்ளார். அதற்கு இதுவரை விசாரணை செய்யவில்லை. திமுகவினர் லஞ்சம் வாங்கவில்லை என்றால் தான் விசாரணை செய்வார்கள். ஒன்றரை வருடம் ஆ.ராசா ஜெயிலில் இருந்தவர், உங்களுக்கு வேட்பாளராக வேண்டுமா என்று சிந்தியுங்கள் என்று பேசினார். 

பாஜக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட எல்.முருகன், மோடி கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியை அதிகரித்துள்ளது. இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் மோடி வந்த பிறகு உலக அளவில் பதக்கங்களை வென்று குவித்து வருகிறது. திமுக தரும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு திட்டம் இன்னும் பல லட்சம் பெண்கள் பயன் அடையவில்லை எனவும்  குற்றம் சாட்டினார்.  

பாஜக முன்னாள் அமைச்சர்  மாஸ்டர் மாதன், நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலை கொண்டு வந்தார். அனைத்து கிராமங்களுக்கும் சமுதாய கூடங்கள் கட்டிக் கொடுத்தார். அவரைப்போல பணியாற்றிட எனக்கும் வாய்ப்பு அளித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும். பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும் எனவும் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow