நீட் தேர்வை நுழைய விட்டது நாங்கள் இல்லை...இவர்கள் தான்...உதயநிதி ஸ்டாலின் பேச்சு...
தேனியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்த போது, நீட் தேர்வை திமுகவும் நுழையவிடவில்லை, ஜெயலலிதாவும் நுழையவிடவில்லை என்று பேசினார்.
தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்த போது, நீட் தேர்வை திமுகவும் நுழையவிடவில்லை, ஜெயலலிதாவும் நுழையவிடவில்லை என்று பேசினார்.
தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி நகரில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தல் வாக்குப்பதிவில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தங்க தமிழ்ச்செல்வனை அமோகமாக வெற்றிபெறச் செய்யவேண்டும். அவர் வெற்றி பெற்றால் மாதம் இரண்டு நாட்கள் தேனி தொகுதிக்கு வந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் நாம் வெற்றிபெற வேண்டும்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் நீட் தேர்வை திமுக அரசு நுழைய விடவில்லை, ஜெயலலிதாவும் நுழைய விடவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு பாஜகவுடன் சேர்ந்து நீட் தேர்வை நுழையவிட்டதால் 21 மாணவர்கள் உயிரிழந்தார்கள்" என்று ஆதங்கமாகப் பேசினார்.
மேலும் "மத்திய பாஜக அரசு எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக தேர்தல் வாக்குறுதிப்படி சிலிண்டர் விலை 500 ரூபாயாகக் குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும்" என்று உறுதிபட தெரிவித்தார்.
What's Your Reaction?