"கண்டா வரச்சொல்லுங்க..  கையோட கூட்டிவாருங்க" - சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தொகுதியை மறந்து சுற்றி திரியும் அவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

Feb 23, 2024 - 12:20
Feb 23, 2024 - 14:23
"கண்டா வரச்சொல்லுங்க..  கையோட கூட்டிவாருங்க" - சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரத்தை காணவில்லை என சிவகங்கை முழுவதும் பொதுமக்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  
 
சிவகங்கை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக காங்கிரசைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் உள்ளார். இவர் தனது தொகுதி பிரச்னைகளை தீர்க்காமலும், தொகுதி மக்களின் தேவைகளை கேட்டு நிவர்த்தி  செய்வதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினரானபின் தொகுதி பக்கமே வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 

இந்நிலையில், கார்த்திக் சிதம்பரத்தை காணவில்லை என சிவகங்கை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி சிவகங்கை மாவட்டம் என ஒட்டப்பட்ட போஸ்டரில்,"நெட்ப்ளிக்ஸ்-ல் படம் பார்த்துக் கொண்டும், சமூக ஊடகங்களில் மோடியை புகழ்ந்து கொண்டும், தொகுதியை மறந்து சுற்றி திரியும் அவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்" என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow