மனைவியின் தலையுடன் வீதியில் உலா வந்த கணவர்.. மேற்கு வங்க போலீசார் அதிர்ச்சி..
மனைவியின் தலையை கையில் எடுத்துக்கொண்டு அருகாமையில் இருந்த பேருந்து நிலையம் அருகே சென்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் குடும்பத்தகராறில் வெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் கணவர் சாலையில் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம், பூர்பா மேதினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கெளதம் குச்சாய்த் -ராணி தம்பதி. இவர்களுக்கு குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி கெளதம் குச்சாய்த் ராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் அரிவாளால் மனைவியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் ராணியின் தலை துண்டாகியுள்ளது. இதையடுத்து மனைவியின் தலையை கையில் எடுத்துக்கொண்டு அருகாமையில் இருந்த பேருந்து நிலையம் அருகே சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். மேலும் தலையுடன் சாலைகளில் சுற்றித்திரிந்த கெளதமை போலீசார் கைது செய்தனர்.
துண்டிக்கப்பட்ட தலையையும், உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையில் கெளதம் சற்று மனநலம் சரியில்லாதவர் என்றும், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?