மாவட்டந்தோறும் ‘குறள் குழந்தை’யை உருவாக்கலாமே... வைரமுத்து ஐடியா! 

திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையை உருவாக்கினால் திருக்குறளும் வாழும், அடுத்த தலைமுறையும் வாழும் என பதிவிட்டுள்ளார்

மாவட்டந்தோறும் ‘குறள் குழந்தை’யை உருவாக்கலாமே... வைரமுத்து ஐடியா! 

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர் ஒருவரது திறமையைக் குறிப்பிட்டு X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின் X தளப் பதிவில், மதுரையில் அதிசயமான மாணவரைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மதுரை குயின்மீரா சர்வதேச பள்ளியின் மாணவர் விஷ்ணுப்ரியன், 1330 குறள்களையும் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். அவருடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அதில், வைரமுத்து தொடங்கும் குறள்களைச் சிறுவன் கூறி முடித்து வைப்பதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், மாவட்டந்தோறும் குறள் குழந்தை என்ற எண்ணத்தில் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையை உருவாக்கினால் திருக்குறளும் வாழும், அடுத்த தலைமுறையும் வாழும் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து மாணவர் விஷ்ணுப்ரியனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow