பாலிவுட் நடிகையோடு ஜோடி சேரும் லெஜெண்ட் சரவணன்.. காலம் கைகூடினால் அரசியலுக்கு வருவாராம்!

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Sep 16, 2024 - 11:22
பாலிவுட் நடிகையோடு ஜோடி சேரும் லெஜெண்ட் சரவணன்.. காலம் கைகூடினால் அரசியலுக்கு வருவாராம்!
legend saravanan new film

தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய 'கருடன்' பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி செல்லும் வழியில் பேசிய லெஜெண்ட் சரவணன், காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'தி லெஜெண்ட்' திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார். 

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'காக்கி சட்டை',  'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். 

புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர். 

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய 'கருடன்' பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.

தூத்துக்குடிக்கு படப்பிடிப்பிற்கு செல்லும் வழியில்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லெஜெண்ட் சரவணா,  எனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள நாங்கள் அங்கு சென்று கொண்டிருக்கிறோம்.  தூத்துக்குடியைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும். படம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு திரைக்கு வரும். படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தப் படம் ஆக்ஷன் - த்ரில்லர் கதையாக இருக்கும்” என்றார்.

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த லெஜெண்ட் சரவணன், “கேரள உயர் நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உயர் நீதிமன்றம் தக்க உத்தரவு பிறப்பிக்கும் என நம்புகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய சரவணன்,“எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டு வரும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமான பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow