மகராசி ரீல் ஜோடி ஸ்ரித்திகாஸ்ரீ எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன்... இப்போ ரியல் ஜோடி.. பிரம்மாண்ட ரிசப்சன்

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனும், ' மகராசி சீரியலில் தன்னுடன் நடிக்கும் இணை நடிகருமான எஸ்.எஸ்.ஆர்.ஆர்யனை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஸ்ரித்திகா எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

Jun 15, 2024 - 15:54
மகராசி ரீல் ஜோடி ஸ்ரித்திகாஸ்ரீ எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன்... இப்போ ரியல் ஜோடி.. பிரம்மாண்ட ரிசப்சன்

நாதஸ்வரம், மகராசி போன்ற சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ரித்திகா தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டதாகவும், தான் விரைவில் மகராசி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் ஆரியனை திருமணம் செய்ய போவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.எளிமையாக  தன்னுடைய இரண்டாவது திருமணம் நடந்து முடிந்ததாக அறிவித்த நிலையில், இவரது வெட்டிங் ரிசப்ஷன் பிரமாண்டமாக நடந்துள்ளது. 


மலேசியாவை சேர்ந்த நடிகை ஸ்ரித்திகா, மாடலாக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர். சன் டிவியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'கலசம்' சீரியலில் அறிமுகமானார். நாதாஸ்வரம் சீரியல் இவரை பிரபலப்படுத்தியது. ஸ்ரித்திகாஸ்ரீ டிவி சீரியல் மட்டுமல்லாது மகேஷ் சரண்யா மற்றும் பலர், வெண்ணிலா கபடி குழு, மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி, வேங்கை  போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சனீஸ் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணமான இரண்டே வருடத்திற்குள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்தில் முடிந்தது.

கணவரிடம் இருந்து இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், மகாராசி சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்து வந்த ஆரியனை ஸ்ரித்திகா காதலித்து வந்தார். இருவரும் இணைந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் அண்மையில் மிகவும் எளிமையான முறையில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கொண்டதாக ஸ்ரித்திகா அறிவித்தார்.


இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு தனது இரண்டாவது திருமணம் குறித்து பகிர்ந்திருந்தார்.இந்த முக்கியமான செய்தியை எங்கள் சமூக ஊடக குடும்பத்திற்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நான்  மற்றும் ஆரியன் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு எங்களுடைய முந்தைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம்.

எங்கள் இருவருக்கும் ஏற்கனவே வேறொரு திருமண வாழ்க்கை இருந்தாலும் அந்த வாழ்க்கையில் இருந்து நாங்கள் பிரிந்த பிறகு அதைப் பற்றி குறை கூற விரும்பவில்லை. அந்த வாழ்க்கை பற்றி எதிர்மறையை பரப்பவோ நாங்கள் விரும்பவில்லை. எங்களின் தூய நட்பும், அன்பும் எங்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு அளித்திருக்கிறது. 

உங்கள் அனைவரின் ஆதரவும் எங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடனும் நாங்கள் பதிவு திருமணத்தை செய்ய உள்ளோம். எப்போதும் போல நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் பொழியுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடக நேர்காணல்களில் விரைவில் பகிர்ந்து கொள்வோம்.

இன்ஸ்டாகிராம் கோளாறுகளால் எங்கள் இருவருடைய இன்ஸ்டாகிராம் ஐடியை மாற்ற முடியாமல் போனது. என்னுடைய கணவர் பெயரோடு என்னுடைய Instagram ஐடி இருந்ததை நான் ஏற்கனவே மாற்றி விட்டேன்.

அதை இப்போது மீண்டும் மாற்ற முயற்சிக்கிறேன். ஆனால் அது சில தொழில்நுட்ப காரணங்களால் முடியாமல் இருக்கிறது. அது விரைவில் மாற்றப்பட்டு விடும் என்று உறுதி அளிக்கிறேன்.நீங்கள் எல்லோரும் எங்களின் புது வாழ்க்கைக்கு ஆதரவு தர வேண்டும் என்று அந்தப் பதிவை நடிகை ஸ்ரித்திகா மற்றும் ஆரியன் இருவரும் பகிர்ந்து இருந்தனர்.

தற்போது ஸ்ரித்திகா - ஆரியன் திருமண ரிசப்ஷன் போட்டோக்களை அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். இவர்களுடைய திருமண ரிசப்ஷனில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர்.

வாணி ராணி, கல்யாண பரிசு மற்றும் திருமகள் போன்ற சீரியலில் நடித்தவர், நிவேதிதா பங்கஜ் என்பவரை எஸ்.எஸ்.ஆர் ஆரியன் முதலில் திருமணம் செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே தன்னுடன் டிவி சீரியலில் இணைந்து நடித்த ஸ்ரித்திகாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் ஆரியன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow