சாகித்ய விருதுகள்.. யூமா வாசுகிக்கு பால புரஸ்கார்.. யுவ புரஸ்கார் விருது வென்ற லோகேஷ் ரகுராமன்

தன்வியின் பிறந்தநாள் புத்தகத்தை எழுதிய யூமா வாசுகிக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Jun 15, 2024 - 15:11
சாகித்ய விருதுகள்.. யூமா வாசுகிக்கு பால புரஸ்கார்.. யுவ புரஸ்கார் விருது வென்ற லோகேஷ் ரகுராமன்


‘தன்வியின் பிறந்தநாள்’ புத்தகத்தை எழுதிய யூமா வாசுகிக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு வந்தார்’ புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான முதல் சிறுகதை தொகுப்பிற்கே சாகித்ய விருது பெற்றுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமன். 

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தன்வியின் பிறந்தநாள் என்ற கதைக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனும் பன்முகத் திறன்கொண்டவர் யூமா வாசுகி. மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய `கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை ‘கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, 2017-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வென்றவர். 

பட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகி, கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். `தோழமை இருள்', `இரவுகளின் நிழற்படம்', `அமுத பருவம்', `வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், `உயிர்த்திருத்தல்' எனும் சிறுகதைத் தொகுப்பும், `ரத்த உறவு', `மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களும் எழுதியவர். கனிந்த, நெகிழ்வான தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தவர். 

யூமா வாசுகியின் படைப்புகளில், குழந்தைகள் தாங்கள் வளரும் வீட்டில் புழங்குவதைப்போல இயல்பாக உலவுவார்கள். குழந்தைகள்மீது அளப்பரிய நேசம்கொண்ட இவர், குழந்தைகள் குறித்து எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘சாத்தானும் சிறுமியும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.

‘ரத்த உறவு' நாவலில், குடும்பச் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நேரிடும் வன்முறை குறித்த வாழ்க்கைப் பதிவுகளைப் பகிர்ந்திருப்பார். யூமா வாசுகியின் ‘அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ கவிதைத் தொகுப்பு, தமிழின் மிகச் சிறந்த காதல் கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. தனது சிறுவயது வாழ்வின் துயரங்களையே அவர் ‘ரத்த உறவு’ நாவலாக எழுதியுள்ளார். யூமாவின் பல்வேறு படைப்புகள் துயரம் தோய்ந்த குழந்தைகளை நம்முன் நிறுத்துகின்றன.

விஷ்ணு வந்தார்’ புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான முதல் சிறுகதை தொகுப்பிற்கே சாகித்ய விருது பெற்றுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமன்.  மே 23ம் தேதி 1990 பிறந்தவர். இவர் இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow