விடாமுயற்சி..300 நாளாச்சு!.அப்டேட் என்னாச்சு?..கொந்தளித்த ரசிகர்கள்...

விடாமுயற்சி டைட்டில் வெளியிட்டு 300 நாளாச்சு, அப்டேட் என்ன ஆச்சு? லைகாவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பேனர் வைத்துள்ளனர்

Feb 26, 2024 - 13:55
விடாமுயற்சி..300 நாளாச்சு!.அப்டேட் என்னாச்சு?..கொந்தளித்த ரசிகர்கள்...

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்படிப்பு தொடங்கி 300 நாட்கள் ஆகியும் அப்டேட் வெளியாகாதை கண்டித்து, புதுச்சேரி அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் பேசும் பொருளாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் ஒரு பிரபலத்தின் பிறந்தநாளில் அவர் நடிக்கும் அடுத்தப் படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருவதால், அனைத்து நடிகர்களும் இதனை பின்பற்றி வருகின்றனர். ஆனால் அஜித்தின் படங்களுக்கான அப்டேட் வெளியாவதில் மட்டும் சில பிரச்னைகள் இருந்து வருகிறது. இது அவரது வலிமை திரைப்படத்தில் இருந்து விடாமுயற்சி வரை தொடர்கிறது. 

புதுச்சேரியில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்கிற்கு படை எடுத்தனர். இதனால் மிகவும் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள், ஒன்று திரண்டு ரீ ரிலீஸ் ஆன படத்திற்காக அஜித்தின் பேனருக்கு மாலை இட்டு, பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். 

இதற்கிடையில், திரையரங்கு வாயில் முன்பு ரசிகர்கள் ஒரு பேனரை கையில் ஏந்தியவாறு நின்றனர். அதில், லைகாவை காணவில்லை, விடாமுயற்சி டைட்டில் வெளியிட்டு 300 நாளாச்சு, அப்டேட் என்ன ஆச்சு? கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அச்சடித்திருந்தனர். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து,  இயக்குநர் மாற்றம், அஜித்தின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் என இழுபறி நீடித்து வரும் நிலையில், தற்போது வரை அப்டேட் வெளியாகாததால், ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow