கடித்த பாம்பு.. கங்கையில் உடம்பை ஊறவைத்த உறவினர்கள்.. மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்

உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்த இளைஞரின் உடலை கங்கை நதியில் ஊறவைத்து உயிரோடு ஜலசமாதியாக்கி விட்டனர். மூட நம்பிக்கையால் இளைஞரின் உயிர் பறிபோயுள்ளது.

May 3, 2024 - 11:06
கடித்த பாம்பு.. கங்கையில் உடம்பை ஊறவைத்த உறவினர்கள்.. மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்

புற்றுநோய் குணமடைய கங்கை நீரில் 5 வயது குழந்தையை மூழ்கி சாகடித்தத சம்பவம் மனதை விட்டு மறைவதற்கு முன்பு பாம்பு கடித்த விஷத்தில் இருந்து குணமடைய இளைஞர் ஒருவரை இரண்டு நாட்களாக கங்கை நதியில் கட்டி வைத்து மிதக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர்  கல்லூரியில் பி காம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். 

வாக்களித்ததற்கு பிறகு வயல்வெளிகளில் நடந்து சென்றபோது அவரது காலில் பாம்பு கடித்தது. இதனையடுத்து உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். இளைஞர் மோகித் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மருத்துவத்தால் சரி ஆகாது என கை விரித்துள்ளனர்.

இதனையடுத்து கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என சிலர் கூறியுள்ளனர். அதனை உண்மை என்று நம்பிய மோகித் குடும்பத்தினர், மூடநம்பிக்கையால் கயிறு கட்டி கடந்த இரண்டு தினங்களாக மோகித்தின் உடலை கங்கை நதியின் போட்டு வைத்துள்ளனர். சுயநினைவின்றி கிடக்கும் மோகித் உடலில் விஷம் இறங்கி விடும் உடல் நிலை தேறிவிடும் என அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர்.

ஆனால்  மூடநம்பிக்கை எதுவும் அந்த இளைஞரை காப்பாற்றவில்லை மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இருந்த போதும் இளைஞர் மோகித்தின் உடல் தொடர்ந்து கங்கை நதியில் மிதக்கவிட்டுள்ளனர். இளைஞருக்கு உயிர் இருக்கிறதா என கூட பரிசோதிக்காமல்  இளைஞரின் உடலை நதியிலேயே போட்டு வைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள்   சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கையால் ஒரு இளைஞரின் உயிர் பறிபோனது பற்றி பலரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow