நான் ரெடி தான் வரவா..! பனையூரில் பரபர மீட்டிங்..! தவெக நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்.. இது தான் காரணமா?
உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தலைவராக பதவி வகிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் இன்று நடக்கிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், மக்கள் பணியை துரிதப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.அடிக்கடி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனையும் அவர் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் உத்தரவின் பேரில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக சென்னை பனையூரில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.இதில் கட்சியின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.2026 தேர்தலுக்கே விஜய் அடித்தளம் போட்டுள்ளதாக பல்வேறு அரசியல் நிபுணர்கள் கணித்த வண்ணம் உள்ள நிலையில், இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?