அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிப்பு

புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.

Jan 11, 2024 - 14:29
Jan 11, 2024 - 18:46
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22 தேதிவரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த 2023ம ஆண்டு ஜூன்14ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்களை அமலாக்கத்தையினர்  தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கில் தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜனவரி 11) முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை  ஜனவரி 22 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் 15வது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது.இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் ஜாமின் கோரி மனு வரும் நாளை (ஜனவரி 12 ) முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow