நான் என்ன பச்சோந்தியா? மாத்தி மாத்தி பேச.. எப்போதும் ஒரே மாதிரிதான் பேசுவேன்.. - நக்கலடித்த உதயநிதி!
கடலூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி, சசிகலா காலில் விழுந்த விவகாரத்தை மாத்தி மாத்தி பேச நான் என்ன எடப்பாடி பழனிசாமியா? எப்போது ஒரே மாதிரிதான் பேசுவேன் என்று நக்கலடித்தார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக அரசு கொண்டு மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், முதலமைச்சர் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை, கல்வி உரிமைத் தொகை, உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் விளக்கினார்.
பின்னர் பேசும்போது, சசிகலா காலில் விழுந்த புகைப்படத்தைக் காட்டி, பாதம் தாங்கி பழனிசாமி என்று எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். மேலும், சசிகலா காலில் விழுந்ததை எடப்பாடி பழனிசாமி பெருமையாக சொல்கிறார். ஆனால், பதவிக்கு வந்த பின்னர் சசிகலாவின் காலை வாரி விட்டவர் எடப்பாடி பழனிசாமிதான். சசிகலா கைதானதுக்கு பின்னர் அவரை யாரென தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி மாற்றி மாற்றிப் பேசினார் என்று உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரித்தார். அப்போது, புதுச்சேரியில் ரேஷன் கடை திறக்கப்படும். மூடப்பட்ட அரசு சார்பு நிறுவனங்களை திறந்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். நோயாளிகள் பயன்பெற இன்சூரன்ஸ் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்டவை கொண்டுவரப்படும். புதுவை பல்கலைக்கழகத்தில் கல்வி வேலை வாய்ப்பு 25% இட ஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும், லிங்கா ரெட்டி சர்க்கரை ஆலையை திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.
What's Your Reaction?