6 பன்னீரை இறக்கி சதி செய்யுறாங்க! ஆதங்கத்தில் ஒரிஜினல் பன்னீர்செல்வம்...

ராமநாதபுரத்தில் தனக்கு எதிராகத் தேடி தேடி கண்டுபிடித்து பன்னீர் செல்வம் பெயர் வைத்த ஆறு பேரை நிறுத்திச் சதி செய்கின்றனர் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

Mar 31, 2024 - 21:54
6 பன்னீரை இறக்கி சதி செய்யுறாங்க! ஆதங்கத்தில் ஒரிஜினல் பன்னீர்செல்வம்...

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராமநாதபுரத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஆனால், அதே தொகுதியில் பன்னீர் செல்வம் என்று பெயர் கொண்ட 6 பேர் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றனர். ஒரே மாதிரியான சின்னம் கோருவது, ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் செய்வது என ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைஞ்சல் கொடுக்கும் வண்ணமே இவர்களது செயல்பாடுகள் இருந்து வருகிறது. 

இந்நிலையில்,  ராமநாதபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, ராமநாதபுரம் தொகுதியில் தேடி தேடி பன்னீர் செல்வம் என்ற பெயர் வைத்த ஆறு பேரை கண்டுபிடித்து வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்து தனக்கு எதிராக சதி செய்கின்றனர். ஆனால், ஓட்டக்கார பன்னீர் செல்வம் என்பது நான்தான். சதிகாரர்காளல் இன்னொரு ஓட்டக்கார பன்னீர் செல்வத்தை கண்டுபிடிக்க முடியாது என்று கூறினார். 

இந்த 6 பேருக்கான சின்னங்களாக வாளி, பலாப்பழம், திராட்சைக் கொத்து இருந்த நிலையில் தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சின்னத்தைக் கேட்டால் குலுக்கல் முறையில்தான் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி முதலில் ஒருவருக்கு வாளி ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் குலுக்கல் முறையில்தான் பலாப்பழம் எனக்கு விழுந்துவிட்டது. பலாப்பழம் சின்னம் எனக்கு கிடைத்தது இறைவன் செயல், பழத்திலேயே பெரிய பழம் பலாப்பழம்தான் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow