மீண்டும் ஏமாற்றிய RCB... மீண்டும் மீண்டுமா? ரசிகர்கள் வருத்தம்

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Apr 3, 2024 - 05:53
மீண்டும் ஏமாற்றிய RCB... மீண்டும் மீண்டுமா? ரசிகர்கள் வருத்தம்

இந்தியாவின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் 17வது சீசன்  ஐபிஎல் தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நடப்பு தொடரின் 15வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஓப்பனர்களாக குயின்டன் டிகாக் - கேஎல் ராகுல் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய குவிண்டன் டிகாக் எதிர் அணியின் பந்துகளை பறக்கவிட்டார். 

6வது ஓவரில் கிளென் மேக்ஸ்வெல்லின் பந்து வீச்சில் 20 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கே.எல்.ராகுல். அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய டிகாக் 56 பந்துகளில் 81 ரன்களை குவித்த நிலையில் ரீஸ் டாப்லி போட்ட 17வது ஓவரில் அவுட்டானார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து 182 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியில் ஓப்பனர்களாக கேப்டன் டூப்ளிசி மற்றும் விராட் கோலி இணைந்து களமிறங்கினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி அவுட்டானார். அவரது விக்கெட்டை தமிழகத்தை சேர்ந்த மணிமாறன் சித்தார்த் கைப்பற்றினார். 19 ரன்கள் எடுத்தபோது டூப்ளசி ரன் அவுட்டாகினார். தொடர்ந்து விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மேகரூன் கிரீனை அடுத்தடுத்த ஓவர்களில் மயங்க் யாதவ் வெளியேற்றனார். அனுஜ் ராவத் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்து 29 ரன்களை எடுத்து வந்த ரஜத் பட்டிதரையும் மயங்க் யாதவ் ஆட்டமிழக்க செய்தார். பின்னர் தினேஷ் கார்த்திக், மயங்க் தாகர், லோம்ரோர், சிராஜ் ஆகியோரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இவர்களில் லோம்ரோர் 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். 19.4 ஓவர்கள் முடிவில் 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆர்சிபி இழந்தது. இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் இரண்டாவது போட்டியில் ஆர்சிபி தோல்வியை தழுவி உள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிலும் லக்னோ அணி சிறப்பாக செயல்பட்டது. இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow