தைவானில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை....
Powerful earthquake-Taiwan
தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்த நிலையில், ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், தைவானின் ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஒரு சில பகுதிகளில் கட்டடங்கள் அஸ்திவாரத்துடன் ஆடியதால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தின் காரணமாக தைவானில் சுரங்க ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது....
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ஜப்பானிய தீவான ஒகினாவாவில், கடல் அலைகள் 3 மீட்டர்(9.8 அடி) வரை எழும்பும் என்றும், சுனாமி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது...
நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு தைவான் அருகே உள்ள யோனகுனி தீவின் கடற்கரையில், வழக்கத்தை விட அதிக உயரமான அலைகள் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மியாகோ மற்றும் யேயாமா தீவுகளின் கடற்கரைகளையும் பேரலைகள் தாக்கக்கூடும் என்று ஜப்பானிய வானிலை மையம் கணித்துள்ளது.
What's Your Reaction?