’தவெக மாநாடுக்கு என்ன பண்ணலாம்..’ முக்கிய நிர்வாகிகளுடம் அனல் பறக்கும் ஆலோசனை

அக்டோபர் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், நிபந்தனைகளை முறையாக கடைபிடிப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்து வருகிறார்.

Sep 26, 2024 - 15:47
’தவெக மாநாடுக்கு என்ன பண்ணலாம்..’ முக்கிய நிர்வாகிகளுடம் அனல் பறக்கும் ஆலோசனை
அக்டோபர் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், நிபந்தனைகளை முறையாக கடைபிடிப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்து வருகிறார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கினார். இதனை  கட்சியாக அங்கீகரிக்ககோரி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார். சமீபத்தில் தவெகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனைத்தொடர்ந்து, 2026  சட்டசபை  தேர்தலை  முன்னிறுத்தி கட்சிகள் பணிகள் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக  உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை என அரசியலில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். 
சமீபத்தில் தவெக கொடியை அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்து வைத்து, முக்கிய நிர்வாகிகளுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். மேலும் காவல்துறையின் அனுமதியுடன் தங்கள் பகுதிகளில் தவெக கொடியை ஏற்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு மதுரை அல்லது திருச்சியில் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தார். மேலும் மாநாடு நடத்துவதற்குரிய அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட காவல்துறையிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, விக்கிரவாண்டியில் காவல்துறை உயர் அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதனால் செப்டம்பரில் மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி தருவதில் காலதாமதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தவெக மாநாட்டிற்கு அனுமதி தர தமிழக அரசு காலதாமதம் செய்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தவெக மாநாட்டிற்கு காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து அக்.27ம் தேதி தவெக மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். மேலும் மாநாட்டிற்கு வரும் தவெக நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த நிலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், நிபந்தனைகளை முறையாக கடைபிடிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தவெக மாநாடு, கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பேசப்படும் என்றும், இது குறித்து விஜய் தனது ஆலோசனைகளை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.  மேலும் , தமிழக அரசியலில் தவெக மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow