அயன் படத்தையே மிஞ்சிட்டாங்க : வயிற்றில் கொகைன் கடத்தல்

மார்ச் 27-31 வரை,   ரூ.6.30 கோடி மதிப்புள்ள தங்கம், உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்.

Apr 1, 2024 - 03:27
அயன் படத்தையே மிஞ்சிட்டாங்க : வயிற்றில் கொகைன் கடத்தல்

அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் காப்ஸ்யூல்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

இந்தியாவில் நாளுக்கு நாள் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரூ.2,000 மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய ஜாபர் சாதிக் விவகாரம் விஷ்வரூபமாக உருவெடுத்தது. அதேநேரம், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து போதைப் பொருள் இறக்குமதி செய்யப்படும் நிலையில் அதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் அயன் திரைப்பட பாணியில் போதைப் பொருள் கடத்திய சம்பவம் மும்பை சிஎஸ்எம்ஐ விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது. விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சோதனை செய்ததில், அவரது வயிற்றில் கொகைன் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.  ரூ.11 கோடி மதிப்பிலான 1,108 கிராம் கொகைன் அடங்கிய 74 மாத்திரைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப் பொருளை கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மும்பை விமான நிலையத்தில் கடந்த மார்ச் 27 முதல் 31-ம் தேதி வரை,   ரூ.6.30 கோடி மதிப்புள்ள 10.68 கிலோ தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், வெளிநாட்டு கரன்சி மற்றும் அழகுசாதனப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow