அருணாசலப்பிரதேசத்தில் நிலச்சரிவு.. சீன எல்லையில் முக்கிய சாலை துண்டிப்பு..
அருணாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலசரிவால் சீன எல்லையில் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் எல்லையோரத்தில் அமைந்துள்ள அருணாசலப்பிரதேசத்தின் எல்லையோர மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து திபாங் பள்ளத்தாக்கில் தேசிய நெடுஞ்சாலை 313-ல் ஹூன்லி - அனினி பகுதிகள் இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. கடினமான தன்மை கொண்ட அப்பகுதியின் நெடுஞ்சாலையை பொதுமக்கள் பெரிதும் சார்ந்திருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளளது. அதேவேளையில் நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிக்கு குறைந்தது 3 நாட்கள் ஆகும் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட திபாங் பள்ளத்தாக்கு நாட்டின் முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதி என்பதால் சீரமைப்புப் பணிகள் விரைவில் நடத்தி முடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
தொடர்ந்து மழை, நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?