ரஜினியின் வேட்டையனுடன் மோதும் கங்குவா... சூர்யாவின் முடிவுக்கு இதுதான் காரணமா..?

ரஜினியின் வேட்டையனுடன் சூர்யாவின் கங்குவா மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Jun 28, 2024 - 15:56
ரஜினியின் வேட்டையனுடன் மோதும் கங்குவா... சூர்யாவின் முடிவுக்கு இதுதான் காரணமா..?

சென்னை: சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சூர்யாவின் 44வது படமாக உருவாகும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது. இந்நிலையில், சூர்யா நடித்து முடித்துவிட்ட கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அபிஸியலாக அறிவித்துவிட்டது. அதன்படி இந்தப் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா, சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான மூவி என சொல்லப்படுகிறது. ஃபேண்டஸியான பீரியட் ஜானர் படமான கங்குவா, 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அக்டோபர் மாதம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அக்டோபர் மாதம் வரும் ஆயுத பூஜை விடுமுறைகளை மனதில் வைத்து வேட்டையன் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது படக்குழு. அதே பிளானுடன் சூர்யாவின் கங்குவா படமும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் வெளியாகும் தேதியில், மற்ற ஹீரோக்கள் ஒதுங்கிவிடுவது வழக்கம். ரஜினியின் படங்களுக்கு தான் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுப்பார்கள் என்பதோடு, தியேட்டரிலும் ஸ்க்ரீன்கள் ஒதுக்குவதில் சிக்கல்கள் எழும். இதனால் ரஜினியும் தனது படங்களை ஒத்தையாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்றே படக்குழுவுக்கு சைலண்டாக ஆர்டர் போட்டுவிடுவார். 

அப்படியே சின்ன பட்ஜெட் அல்லது சின்ன ஹீரோக்களின் படங்கள் வெளியானாலும், ரஜினிக்கு அதிக ஸ்க்ரீன்கள் கிடைத்துவிடும். ஆனால், இந்தமுறை வேட்டையன் ரிலீஸாகவுள்ளது தெரிந்தே தனது கங்குவா படத்தையும் அதேநேரத்தில் வெளியிட முடிவு செய்துவிட்டார் சூர்யா. இரண்டு படங்களுக்கும் சம அளவில் ஸ்க்ரீன்கள் கிடைக்கும் என்றே சொல்லப்படுகிறது. முக்கியமாக வேட்டையனை விட கங்குவா படத்தின் பட்ஜெட் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வேட்டையனுடன் மோத ரெடியாகிவிட்டது கங்குவா. இதற்கெல்லாம் லைகா தான் காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாகவே லைகா நிறுவனம் கடும் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிக்கொண்டு திணறி வருவதாக சொல்லப்படுகிறது. லால் சலாம் எதிர்பார்த்தளவில் வசூலிக்கவில்லை, அதேபோல், மேலும் சில சின்ன பட்ஜெட் படங்களும் ஹிட்டாகவில்லை. இன்னொரு பக்கம் இந்தியன் 2 ரிலீஸ், விடாமுயற்சி ஷூட்டிங் என லைகா பலவிதங்களில் தடுமாறி வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக வேட்டையன் படத்திற்கு பெரியளவில் ப்ரோமோஷன் செய்ய லைகா டீம் தயாராக இல்லை. இப்போதெல்லாம் எந்த ஹீரோவாக இருந்தாலும் ப்ரோமோஷன் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதிலும் வேட்டையனில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

எனவே வேட்டையனுக்கு ப்ரோமோஷன் செய்யவில்லை என்றால் ரசிகர்களிடம் ரீச் ஆகாது. ஆனால், கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வேற லெவலில் இருக்க வேண்டும் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதையெல்லாம் வைத்து தான் ரஜினியின் வேட்டையனுடன் மோத முடிவு செய்துவிட்டாராம் சூர்யா. இதனிடையே ரஜினியின் வேட்டையன் ஒருநாள் முன்னதாக அக்டோபர் 9ம் தேதி வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow