ஹீரோ லூஸா? இல்லையா? ’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் விமர்சனம்!
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ஹீரோவாக நடித்துள்ள ’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் விமர்சனம் காண்க.

விஷ்ணு விஷால் தனது தம்பிக்காக தயாரித்த திரைப்படம் ’ஓஹோ எந்தன் பேபி’. பட வெளியீட்டிற்கு முன்பு பக்காவான காதல் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது படத்தின் டிரைலர். ஆனால், படம் டிரைலர் கொடுத்த உணர்வினை தந்ததா? ’ஓஹோ எந்தன் பேபி’ படத்திற்கான குமுதம் விமர்சனம் பின்வருமாறு-
ஹீரோவுக்கு மூன்று பருவத்தில் மூன்று விதமான காதல். அதில் எந்தக் காதல் அவருக்கு செட்டாச்சு என்பதல்ல கதை. மூன்று காதலிகளும் ஹீரோவின் கேனத்தனத்தை அவனுக்கு எப்படி புரிய வைத்தார்கள் என்பதுதான் கதை.
அதாவது ஹீரோவுக்கு தான் லூஸா, இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ள மூன்று காதல், மூன்று காதலிகள். முதல் காதலி, 'தம்பி உனக்கு சரியா முத்தம் கொடுக்கத் தெரியலை'னு சொல்ல, இரண்டாவது காதலியோ, 'நீ அவளா இருந்தாதான் எனக்கு செட்டாகும்'னு சொல்லிடறார். மூன்றாவது காதலியிடம், தான் பெரிய அப்பாடக்கர் மாதிரி ஸீன்போட, அவரோ, 'போடா நார்ஸிஸ்ட்'னு போயிடறார். முடிவில் இருவரும் ஒண்ணு சேர்வதுதான் கதை. இயக்கம் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
விஷ்ணுவிஷால் தன் தம்பி ருத்ராவுக்காக எடுத்த படம். தானும் நடித்திருக்கிறார். ருத்ரா இந்த கேரக்டருக்கு ஓகே. மத்தபடி பெரிய ஸ்பார்க்லாம் ஒண்ணும் தெரியல.. ஹீரோயின் மிதிலா வித்தியாசமான அழகு. எக்ஸ்பிரஷன்ஸ் சூப்பர். மிஷ்கின், கருணாகரன் அலட்டாமல் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு பளிச், இசை பளீர்.
சினிமாவுக்குள்ல சினிமா எடுக்குறது.. ட்ரோன் ஷாட்ல படத்தை ஓபன் பண்றது... கட் பண்ணா வாய்ஸ் ஓவர். 'இவன்தான் ஹீரோ.. இதான் அவன் வீடு. அவன் காலேஜ்க்கு எப்படி போவான், கக்கூஸ்க்கு எப்படி போவான்.. கடுப்பேத்துறாங்க மைலார்ட்...' நாம சொல்லல, ஃபேமிலி ஷோவுல பக்கத்துல இருந்த சின்னப் பையன் சொல்றான்.
ஓஹோ எந்தன் பேபி'- ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்
What's Your Reaction?






