நெட்டி மாலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை- தொழிலாளர்கள் வேதனை

அரசு நெட்டி மாலை தயாரிப்பதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டி மாலை  தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Jan 3, 2024 - 16:59
Jan 3, 2024 - 20:42
நெட்டி மாலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை- தொழிலாளர்கள் வேதனை
நெட்டி மாலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை- தொழிலாளர்கள் வேதனை

மாடுகளை அலங்கரிக்க உற்பத்தி செய்யும் நெட்டி மாலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் அருகே திப்பராஜபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெட்டி மாலை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறனர்.இவர்கள் இங்குள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் படர்ந்து கிடக்கின்ற நெட்டி செடிகளை சேகரித்து அதை வைத்து நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆறு குளங்கள் தூர்வாரப்படுவதால் நெட்டி கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அதேபோல் தற்போது மாடுகளும் குறைந்தது மட்டுமின்றி பிளாஸ்டிக் மற்றும் காகித மாலைகள் வருகையால் நெட்டி மாலைக்கு இருந்த மவுசு குறைந்து உற்பத்தி செய்யும் மாலையை உரிய விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது.மேலும் மூல பொருட்களான நெட்டி, நாறு, வண்ண கலர்கள் என பல பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செய்யும் நெட்டி மாலைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. 

இதே நிலை நீடித்தால் நெட்டி மாலையில் தயாரிக்கும் தொழில் முற்றிலும் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அரசு நெட்டி மாலை தயாரிப்பதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டி மாலை  தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow