பண்ருட்டி அருகே கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம்
ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று நள்ளிரவு கிராமம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கிராம மக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையம் கிராமம் உள்ளது.இதன் ஒரு பகுதி சிறுவத்தூர் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி சேமக்கோட்டையிலும் வருகிறது.இதனால் எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி, வரும் நாடாளுமன்ற தேர்லை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் டிஜிட்டல் பேனர் வைத்து முதற்கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் நந்தகுமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.தொடர்ந்து இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறி கடந்த ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று நள்ளிரவு கிராமம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்து பள்ளி மாணவர்களுடன் கிராமம் முழுவதும் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?