புழல் ஏரியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நீர்வழிப் பாதைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
புழல் ஏரியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் புழல் ஏரி மற்றும் சோழவரம் ஏரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீர்த்தேக்கத்திற்கான நீர்வரத்து, கொள்ளளவு, நீர் வெளியேற்றம், கரைகளின் உறுதித் தன்மை மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயலினால் சேதம் அடைந்த மண் கரைகள், நீர்வழிப் பாதைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். ஏற்கனவே புழல் ஏரியில் குறிப்பிட்ட இடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?