சிறுநீரகம் செயலிழந்த சிறுமியை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 981 பாம்பு கடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 903 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த 9 வயது சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரத்தநாடு அருகே துறையூரை சேர்ந்த 9 வயது சிறுமி பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு கடந்த 4ந் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதில் ரத்தம் உறைதல் குறைபாடு மற்றும் தற்காலிக சிறுநீரக செயலிழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாம்பு கடி விஷ முறிவு மருத்துவ மற்றும் டயாலிசிஸ் சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு 27 நாட்களுக்குப் பிறகு பூரண குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 981 பாம்பு கடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 903 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 9 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் பாராட்டு தெரிவித்தார்.மேலும் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?