புது ரத்தம் பாய்ச்சும் இந்தியா!... 4 வருடங்களில் 15 அறிமுக வீரர்கள்!
விக்கெட் கீப்பர் – பேட்டர் துருவ் ஜுரல், மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃபராஸ் கான், மிடில் ஆர்டர் பேட்டர் ரஜத் படிதார், வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
2021-ல் முதல் இந்திய டெஸ்ட் அணியில் இதுவரை 15 வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரல், ஆகாஷ் தீப் என நான்கு இந்திய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்துள்ளனர்.
2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பார்டர் – காவஸ்கர் தொடரின் போது அதிகபட்சமாக 5 இந்திய வீரர்கள் அறிமுகமாகினர். விராட் கோலி, தனது முதல் குழந்தை பிறப்பிற்காக முதல் டெஸ்டுடன் இந்தியா திரும்பிய நிலையில், துணை கேப்டன் ரஹானே அணியை வழிநடத்தினார்.
முன்னணி வீரர்கள் காயமடைந்த நிலையிலும் தீரத்துடன் விளையாடிய இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்தது. நவ்னீப் சைனி, நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் கோலி, ஷமி ஆகியோர் இல்லாத நிலையில் 4 வீரர்கள் புதுமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர். விக்கெட் கீப்பர் – பேட்டர் துருவ் ஜுரல், மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃபராஸ் கான், மிடில் ஆர்டர் பேட்டர் ரஜத் படிதார், வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
புதுமுக வீரர்கள் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி வருவது இந்திய கிரிக்கெட்டின் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?