பும்ராவின் அறிவுரையை கேட்டேன்... விக்கெட்டுகளை அள்ளினேன்... ஆகாஷ் தீப் சக்ஸஸ் சீக்ரெட்..!
பும்ரா மற்றும் பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி பந்து வீசியதால் விக்கெட்டுகளை கைப்பற்றினேன் என்று ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ராவின் அறிவுரையின்படி பந்து விசீயதால் விக்கெட்டுகளை கைப்பற்றினேன் என்று அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கிய பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.தொடக்க பேட்டர்கள் பென் டக்கட் - க்ராலி ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ் தீப், இங்கிலாந்து துணை கேப்டன் ஓலி போப்பை ’டக் அவுட்’ செய்தார்.
இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு பேசிய வர்ணனையாளர் குழுவிடம் பேசிய ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி பந்து வீசியதால் விக்கெட் கைப்பற்றினேன் என்றார். முதல் தர கிரிக்கெட்டில் பொதுவாக முழு நீளத்தில் வீசுவோம்.ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டர்கள் டிரைவ் செய்யப்பார்ப்பார்கள். எனவே, கொஞ்சம் நீளத்தை இழுத்துப் பிடித்து வீசு என்று பும்ரா கூறினார் என்கிறார் ஆகாஷ் தீப்.
தந்தை மற்றும் அண்ணனை அடுத்தடுத்து பறிகொடுத்து, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த பிஹாரை சேர்ந்த ஆகாஷ் தீப்பின் வெற்றி இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
What's Your Reaction?