நியூஸ்7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் !

மர்ம நபர்கள் தன்னை பின்தொடர்கிறார்கள் என்று காவல் துறையிடம் தெரிவித்தபோதும் காவல்துறையினரின் அலட்சியத்தால் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Jan 25, 2024 - 10:58
Jan 25, 2024 - 12:44
நியூஸ்7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் !

மர்ம நபர்கள் தன்னை பின்தொடர்கிறார்கள் என்று காவல் துறையிடம் தெரிவித்தபோதும் காவல்துறையினரின் அலட்சியத்தால் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7  தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு . இவரை நேற்று  24-01-2023 புதன்கிழமை இரவு  அன்று செய்தியாளர் அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேசபிரபு வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர். 

அதனைத்தொடர்ந்து நேச பிரபு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த நிலையில் காமநாயக்கன்பாளையம் போலீசார்  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமூக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தினார். மேலும் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் ஒன்றை தெரிவித்திருந்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்,  நேச பிரபு மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என்கிற தகவல் அதிர்ச்சியைத் தருகிறது. இதற்கு காரணமான காவல்துறையினருக்கும் கடும் கண்டனங்கள்.அலட்சியமாக இருந்து தாக்குதல் சம்பவத்தை தடுக்காத காவல்துறையினர் மீது காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் வலியுறுத்துகிறோம் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow