கையில் இரும்புராடுடன் பொதுமக்களை மிரட்டிய போதை ஆசாமி

அரசு பேருந்து வந்தபோது அதனை இரும்புராடால் அடிக்க முற்பட்டார்.

Nov 22, 2023 - 11:15
Nov 22, 2023 - 13:57
கையில் இரும்புராடுடன் பொதுமக்களை மிரட்டிய போதை ஆசாமி

சேத்தியாத்தோப்பில் டைம் பாஸுக்கு ரவுடியாக மாறிய போதை ஆசாமி கையில் இரும்பு ராடுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம்,புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு நகரில் ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்தப் பகுதி இருந்து வருகிறது.இந்தப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இரவு நேரம் என்பதால் நேற்று ஆட்கள் குறைவாக வெறிச்சோடி காணப்பட்டது.அப்போது அங்கே திடீரென வந்த போதை ஆசாமி ஒருவர் தன் கையில் வைத்திருந்த இரும்பு ராடை எடுத்துக்கொண்டு நடுரோட்டுக்கு சென்றார்.

அப்போது சாலையில் வருவோர் போவோரை டைம் பாஸுக்காக மிரட்டத்தொடங்கினார்.அரசுப் பேருந்து ஒன்று அவரது அருகில் வந்து திரும்பிய போது அதனை தனது காலால் எட்டி உதைத்தார்.பின்பு வேறொரு அரசு பேருந்து வந்த போது அதனை இரும்புராடால் அடிக்க முற்பட்டார்.அதற்குள் அதுசென்று விட்டது.இப்படி  போதை தலைக்கேறியதால் பல்வேறு ரவுடித்தனமான சேட்டைகளை செய்து கொண்டே இருந்தார் போதை ஆசாமி.

இதை அங்கு நின்றிருந்த சிலர் அச்சத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.இவரின் சேட்டைகள் அதிகமாவதைக் கண்ட அங்கிருந்த சிலர் அவரிடம் வந்து விசாரித்தபோது தெனாவட்டாக பதிலளித்தார்.

பின்னர் அவரை  ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்தப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற போதை தலைக்கேறிய டைம் பாஸ் ரவுடிகள் வருவதும், போவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.இதனால் பாதிக்கப்படுவது என்னவோ பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் பொதுமக்களும் தான்!. இதுபோன்ற போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow