டாஸ்மாக் மதுபாட்டில்கள் விலை உயர்வதாக செய்திகள் ... அதிர்ச்சியில் குடிமகன்கள்

வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இது ‘குடி’மகன்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Jan 29, 2024 - 21:50
டாஸ்மாக் மதுபாட்டில்கள் விலை உயர்வதாக செய்திகள்  ... அதிர்ச்சியில் குடிமகன்கள்

வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இது ‘குடி’மகன்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலமாக சாதாரண வகையில் 43 பிராண்ட்களில் மதுபானங்களும், மீடியம் ரேஞ்சில் 128 வகைகளிலும், பிரீமியம் பிராண்ட்களும், 35 வகையான பீர் பாட்டில்களும், 13 வகையான ஒயின் பாட்டில்களும்  விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன.

டாஸ்மாக் கடைகளில் சாதாரண வகை மதுபானங்கள் தான் , சுமார் 40 சதவீத அளவிற்கு குடிமகன்களை திருப்திப்படுத்துவதால் , இதன் விற்பனை தான் மற்ற உயர்ரக மதுவை  விட கூடுதல் அளவிற்கு விற்பனை 
செய்யப்படுகிறது..  இதில்  குவார்ட்டர் பாட்டில் 130 ரூபாய் ஆகவும் , ஆப் பாட்டில் 260 ரூபாய் ஆகவும் ,  ஃபுல் பாட்டில் 520 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்  சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் தான் டாஸ்மாக்  வசூல் பல ஆயிரம் கோடிகளில் டார்கெட் நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது . இந்த டாஸ்மாக் வருமானத்தில் தான் பாதி அரசாங்கம் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்..

இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண மற்றும் மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாயும், ஃபுல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் விலை உயர்த்தப்படுகிறது. அனைத்து வகை பீர் மதுபானங்களின் விலை ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow