சங்கி என்பதில் பெருமையே - வானதி ஸ்ரீனிவாசன் MLA
இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களில் சமசரம் செய்து கொள்ளாத உண்மையான குடிமக்கள் தான் சங்கி. அப்படி எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான்" - வானதி ஸ்ரீனிவாசன் MLA
அயோத்தி ராமர் கோயில் ஆலய பிரதிஷடையில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் " இது ஒரு வரலாற்று நிகழ்வு ,சிறந்தமுறையில் குழந்தை ராமரை தரிசனம் செய்தேன். ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு, முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது , என்னைப் பொறுத்தவரை இது ஆன்மீக நிகழ்வு , இதை அரசியலுடன் பொருத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம், இனி கண்டிப்பாக ஒவ்வொரு வருடமும் அயோத்தி வந்து ராமரை தரிசனம் செய்வேன் என்று கருத்து தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் சமூகவலைத்தளங்கள் முழுக்க சங்கி ரஜினி என்று அவரை நக்கல் செய்து X தளத்தில் ட்ரெண்ட் செய்தனர் சில கட்சியினர் ..
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் , லால் சலாம் ஆடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் , லால் சலாம் திரைப்படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் " தனது தந்தை ரஜினிகாந்த் சங்கி இல்லை எனவும் , சங்கியாக இருந்தால் லால் சலாம் போன்ற திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்க மாட்டார் எனவும் பேசி இருந்தார் ...
இந்த நிகழ்வுகள் யாவும் பேசு பொருளாக மாறி வந்த நிலையில் , ரஜினிகாந்த்தின் மகள் கூறிய கருத்து குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "பாஜகவுக்கு எதிரான கொள்கையை வைத்திருப்பவர்களும், எதிர்கருத்து வைத்திருப்பவர்களும் எங்களை இழிவுப்படுத்தும் ஒரு சொல்லாக 'சங்கி' என்பதை பயன்படுத்துகின்றனர். இது ரொம்ப நாளாகவே தமிழ்நாட்டில் நடந்துட்டு தான் இருக்கிறது .. சங்கி என்பதற்கு நான் அர்த்தம் சொல்லட்டுமா? இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களில் சமசரம் செய்து கொள்ளாத உண்மையான குடிமக்கள் தான் சங்கி. அப்படி எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான்" என்று சற்று ஆக்ரோஷமாகவே பதிலடி கொடுத்தார்
What's Your Reaction?