"கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது" - பொன்முடி

வெள்ள நிவாரணம் அளிக்காமல் மதுரை எய்ம்ஸ்-ஐ மறந்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்தால் எதுவும் நடக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Mar 5, 2024 - 08:30
"கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது" - பொன்முடி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டுக்கு வந்து இலவச மின்சாரம் கொடுப்போம் என பிரதமர் இன்று கூறும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்திலேயே தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது வராமல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் தமிழ்நாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்தால் எதுவும் நடக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் சிறப்பான ஆட்சி அமைய, I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow