தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர், நடிகை யார் தெரியுமா?
2015.ம் ஆண்டின் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த நடிகர் விருது மாதவனுக்கும், 36 வயதினிலே படத்திற்காக சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சிறந்த படமாக 'தனி ஒருவன்' திரைப்படமும், சிறந்த இயக்குநராக 'இறுதிச்சுற்று' படத்திற்காக சுதா கொங்கராவுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'இறுதிச்சுற்று' படத்தில் நடித்த மாதவனுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், '36 வயதினிலே' படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் அளிக்கப்படவுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக உத்தமவில்லன் - பாபநாசம் படங்களுக்காக ஜிப்ரானுக்கும், சிறந்த பாடலாசிரியராக 36 வயதினிலே படத்திற்காக விவேக்குக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணிப் பாடகராக 'வை ராஜா வை' படத்திற்காக கானா பாலாவுக்கும், சிறந்த பின்னனிப் பாடகியாக '36 வயதினிலே' படத்திற்காக கல்பனா ராகவேந்தருக்கும் அளிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறந்த கதையாசிரியராக 'தனிஒருவன்' படத்துக்காக மோகன் ராஜாவுக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசு 'வை ராஜா வை' படத்துக்காக கவுதம் கார்த்திக்குக்கும், சிறந்த நடிகைக்கான சிறப்புப்பரிசு ரித்திகா சிங்குக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லன் நடிகருக்கான விருது 'தனிஒருவன்' படத்திற்காக அரவிந்த் சாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2014-2015ம் ஆண்டுக்கான 'எம்.ஜி.ஆர்' திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'புர்ரா' படத்திற்காக மோகன் குமாருக்கு சிறந்த இயக்குநருக்கான விருது அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?