'யோகாவை அன்றாட பழக்கவழக்கமாக மாற்றுங்கள்'... சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா பயிற்சி செய்தார். மிக பிரமாண்டமான நடந்த இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் 7,000க்கும் மேற்பட்டவர்கள் யோகா செய்தனர்.

ஜம்மு: யோகாவை மக்கள் அன்றாட பழக்கவழக்கமாக மாற்ற வேண்டும் என்று சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து இந்தியா முழுவதும் கொண்டு சென்றார்.
சர்வதேச யோகா தினத்தை உலகளவில் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் முன்மொழிந்தார். இதை ஏற்ற ஐநா, ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜகவினர், பல்வேறு தரப்பினர், பொதுமக்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா பயிற்சி செய்தார். மிக பிரமாண்டமான நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் 7,000க்கும் மேற்பட்டவர்கள் யோகா செய்தனர்.
யோகா நிகழ்ச்சி முடிந்தவுடன் அதில் பங்கேற்றவர்கள் பிரதமர் மோடியுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பின்பு பேசிய பிரதமர் மோடி, ''10வது சர்வதேச யோகா தினத்தை இன்று கடைபிடிக்கிறோம். இதற்காக காஷ்மிர் மண்ணில் இருந்து உலகில் உள்ள ஒவ்வொருக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
யோகாவை ஒவ்வொருவரும் தங்களது அன்றாட பழக்கவழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில் யோகா இயற்கையாகவே நமது உடலுக்கு நல்ல பலன்களை அளித்து வருகிறது. மேலும் யோகா நமது உடல் வலுவை அதிகரித்துகிறது. நல்ல உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. ஜம்மு-காஷ்மீரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அழிக்கிறது'' என்று கூறினார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து நாடு முழுவதும் பாஜக முதல்வர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாஜக மூத்த தலைவர்கள் யோகா செய்து வருகின்றனர். சென்னை அடையாறில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
இதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு பேசிய அவர், ''பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்கு முன் யோகாவை உலகம் முழுவதும் அனைவருக்கும் கிடைக்கச் செய்தார். ஆரோக்கியமான நாட்டுக்கு யோகா வலுவகுக்கும். உலக நாடுகள் யோகாவை ஏற்றுக் கொண்டன. யோகா கற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.
What's Your Reaction?






