“ஒரு வழியா முடிஞ்சிது” சிபிஐ-க்கு 5 தொகுதி: சிபிஎம், விசிகவுக்கு எத்தனை சீட்
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. இதே போன்று விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளிலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
வரும் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு தொடங்க உள்ளது. ஆகவே 2 தினங்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை முடித்து விட வேண்டும் என திமுக தலைமை நினைக்கிறது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கப்பட்டதால், தங்களுக்கு கூடுதலாக வேண்டும் என சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் அக்கட்சி நிர்வாகி வருகை தந்தனர். 4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. சிபிஎம் பொறுத்தவரை 8 தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால் திமுக தரப்பு 6 தொகுதி மட்டும் தர முடியும் என கூறி வருகிறது. இதே போன்று விசிகவும் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் 10 தொகுதிகள் வேண்டும் என அடம்பிடித்து வருகிறது. ஆனால் திமுக தலைமை 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என கூறிவருகிறது. இதனால் இந்த இருகட்சிகளுக்கும் சீட் ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
What's Your Reaction?

