போதை பொருட்களின் கேந்திரமாகும் மாறி வரும் தமிழகம்..  ஜெயக்குமார் குற்றச்சாட்டு...

Mar 5, 2024 - 17:36
போதை பொருட்களின் கேந்திரமாகும் மாறி வரும் தமிழகம்..  ஜெயக்குமார் குற்றச்சாட்டு...

போதைப் பொருள் கடத்தலுக்கு  எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பேட்டியளிக்க வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக இளைஞர்களை, மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க மக்கள் எழுச்சிப் போரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார். போதை கலாச்சார சீரழிவிற்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்தும், 'டிரக் மாஃபியாக்களாக' வலம் வரும் திமுக நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி 25-ல் சேலம் பொதுக்கூட்டத்தில் தனது கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டு ஒருவார காலம் ஆன நிலையில், எந்தவிதமான தெளிவான விளக்கத்தை, ஆளும் திமுக அரசின் சார்பாகவோ, கட்சியின் சார்பாகவோ தெரிவிக்காத நிலையில், இந்த மக்கள் விரோத அரசுக்கு பாடம் புகட்ட நேற்று (மார்ச் 4) தமிழகம் முழுவதும் 'போதை பொருட்கள் கலாச்சார சீரழிவை' எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை அதிமுகவினர் நடத்திக் காட்டினார்கள். இந்த ஆர்பாட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்க முடியாமல், ஆர்.எஸ். பாரதி மூலம் பேட்டி அளிக்க வைத்துள்ளார். முதலமைச்சரின் இந்த செயலை கண்டிப்பதாகவும், முழுமையான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முழுமையாக தடுக்க கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow