Oscar 2024 Winners: ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்த ஓப்பன்ஹெய்மர்… ஒட்டுமொத்த வின்னர்ஸ் லிஸ்ட் இதோ!
2024ம் ஆண்டுக்கான 96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்று முடிந்தது. இதில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
2024 ஆண்டுக்கான 96வது ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்கிய ஆஸ்கர் விழாவில், முதலில் சிவப்பு கம்பள வரவேற்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியை காமெடி நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர், யோர்கோஸ் லாந்திமோஸ் இயக்கிய புவர் திங்ஸ், கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் வெளியான பார்பி திரைப்படங்கள் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 7 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்கர் 2024 வின்னர் முழுமையான லிஸ்ட் இதோ.
சிறந்த திரைப்படம் – ஓப்பன்ஹெய்மர்
சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகர் – சிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த துணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ப் (ஹோல்டோவர்ஸ்)
சிறந்த தழுவல் திரைக்கதை – அமெரிக்கன் பிக்ஷன்
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த ஒளிப்பதிவு - ஹோய்டே வான் ஹோய்டெமா (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த தயாரிப்பு நிர்வாகம் - ஜேம்ஸ் ப்ரைஸ் & ஷோனா ஹீத் (புவர் திங்ஸ்)
சிறந்த விஷுவல் எபெஃக்ட்ஸ் - யமசாகி, கியோகோ ஷிபுயா, மசாகி தகாஹாஷி & டட்ஸுஜி நொஜிமா (காட்ஸில்லா மைனஸ் ஒன்)
சிறந்த காஸ்ட்யூம் டிசைன் - ஹோலி வாடிங்டன் (புவர் திங்ஸ்)
சிறந்த மேக்கப் & ஹேர் ஸ்டைல் - நாடியா ஸ்டேசி, மார்க் கூலியர் & ஜோஷ் வெஸ்டன்
சிறந்த சவுண்ட் - டார்ன் வில்லர்ஸ் & ஜானி பர்ன் (தி சோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்)
சிறந்த எடிட்டிங் - ஜெனிஃபர் லேம் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த பின்னணி இசை - லுட்விக் கோரன்சன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த பாடல் - பில்லி எலிஷ் & ஃபின்னியாஸ் ஓ'கானல் (பார்பி)
சிறந்த சர்வதேச திரைப்படம் - ஜொனாதன் கிளேசர் (The Zone of Interest -UK)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஹயாவோ மியாசாகி & தோஷியோ சுஜூகி (The Boy and the Heron)
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - வெஸ் ஆண்டர்சன் & ஸ்டீவன் ரேல்ஸ் (The Wonderful Story of Henry Sugar)
சிறந்த ஆவண குறும்படம் - பென் ப்ரூட்ஃபுட் & கிறிஸ் போவர்ஸ் (The Last Repair Shop)
சிறந்த ஆவணப் படம் - மிஸ்டிலவ் செர்னவ், மிச்செல் மிஸ்னர் & ரேனி அரோன்சன்-ராத் (20 Days in Mariupol)
What's Your Reaction?