என்னை அழைக்காததால் கூட்டம் நடக்கக்கூடாது... போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர்...
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில கூட்டத்திற்கு, தம்மை அழைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட தேனி மாவட்டச் செயலாளரை போலீசாரால் கைது செய்தனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில கூட்டத்திற்கு, தம்மை அழைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட தேனி மாவட்டச் செயலாளரை போலீசாரால் கைது செய்தனர்.
தேனியில் உள்ள மண்டப ஒன்றில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்திக்கு,அழைப்பு விடுக்கப்படாததால் மாநில கூட்டம் நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட சக்கரவர்த்தியை காவல்துறையினர் கலைந்து செல்ல பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கலைந்து செல்லாததால், அவர்களது கார்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த போலீசார் முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் மீது வாகனத்தை ஏற்ற முயற்சித்ததால் போலீசாருக்கும் தேனி மாவட்ட ஃபார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சக்கரவர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். பிறகு, கதிரவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் நானே போட்டியிடுவேன் என்று கூறினார்.
What's Your Reaction?