நில மோசடி விவகாரம்...அழகப்பன் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் நடிகை கௌதமி புகார்..
தன்னை ஏமாற்றிய இட தரகர் மற்றும் நிலத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை கௌதமி ராமநாதபுரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் நேரில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து திரையுலகில் பிரபலமானவர் நடிகை கௌதமி. இவர் சென்னையை சேர்ந்த பாஜக பிரமுகரும், கட்டுமான நிறுவன அதிபருமான அழகப்பன் என்பவர் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது கையெழுத்தை அழகப்பனும், அவரது குடும்பத்தினரும் தவறாக பயன்படுத்தி தனக்கு சொந்தமான நிலத்தினை அபகரித்துவிட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
புகாரி அடிப்பைடயில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் கடந்த டிசம்பரில் தலைமறைவாக அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள், கார் ஓட்டுநர் ஆகியோரை கேரளாவில் கைது செய்தனர். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அழக்கப்பன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஸ்வாத்தான் கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக ரூ.3 கோடி பணம் பெற்ற அழக்கப்பன், பிளசிங் அக்ரோ ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வாத்தான் கிராமத்தில் ரூ.57 லட்சத்திற்கு 64 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
வாங்கப்பட்ட இடத்திற்கு செஃபி அமைப்பு தடைவிதித்துள்ள நிலையில் அதை மறைத்து மோசடியாக கெளதமியிடம் சொல்லாமல் அழகப்பன் விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அழகப்பன் ரூ.3 கோடி வரை மோசடி விற்றதாக குற்றம்சாட்டிய நடிகை கௌதமி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருந்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடிகை கௌதமி இன்று (மே 6) ராமநாதபுரம் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகி விபரங்களை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கௌதமி, ராமநாதபுரம் நிலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளேன். போக போக அனைத்து விவரங்களும் தெரியவரும் என்று கூறினார்.
What's Your Reaction?