இசையுலகில் 40 ஆண்டுகளை கடந்த பாடகர் மனோ..! இசை கிரீடம் அணிவித்து அழகு பார்த்த சூப்பர் சிங்கர் குழு..!

தனது வாழ்வில் மிக முக்கியமான மறக்க முடியாத சந்தோசமான தருணம் என நெகிழ்ச்சி அடைந்த பாடகர் மனோ.

Mar 6, 2024 - 18:15
Mar 6, 2024 - 18:25
இசையுலகில் 40 ஆண்டுகளை கடந்த பாடகர் மனோ..!  இசை கிரீடம் அணிவித்து அழகு பார்த்த சூப்பர் சிங்கர் குழு..!

இலட்சக் கணக்கானோர் செல்போனில் பிளே லிஸ்டில் இருக்கும் பாடல்களின் இன்றியமையாத பாடகராக இருக்கும் மனோவின் 40 ஆண்டுகள் பயணத்தை  சூப்பர் சிங்கர் குழு கோலாகலமாக கொண்டாடியுள்ளது

தமிழ் மக்களின்  மனதிற்கு மிக நெருக்கமான சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 ஆண்டுகள் திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் 'மனோ ஸ்பெஷல்' சுற்று நடத்தப்பட்டது. இதில், போட்டியாளர்கள் அனைவரும் மனோவின் பாடல்களைத் பாடி அசத்தினர். மேலும், முன்னாள் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ், சீசன் 9 மற்றும் சீசன் 10-ஐ சேர்ந்த போட்டியாளர்கள் இணைந்து சிறப்புச் சங்கீத நிகழ்வை அரங்கேற்றி பாடகர் மனோவிற்கு இசை மாலை சூட்டினர்.

நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உண்ணிமேனன், கல்பனா, நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் மனோவின் குடும்பத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பாடல்களால் அரங்கமே இசையில் மயங்கியது. அப்போது இசையோடு இசையாக பேசிய மனோ, இந்த நிகழ்வு தனது வாழ்வில் மிக முக்கியமான மறக்க முடியாத சந்தோசமான தருணம் என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், தனது பாடலை  சிறப்பாக பாடி அசத்திய சஞ்சீவ் என்பவரை பாராட்டி  கைக்கடிகாரத்தையும் பரிசளித்தார். 


திரையுலகில் 40 ஆண்டுகளாக பயணித்து 35,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் குடியிருக்கும் மனோ, இசைத் தொட்டிலின் மேலே முத்து மாலை என்பதும்  ராகத் தூளியில் ஆடவந்த வானத்து மின்விளக்கு என்பதும் மறுக்க முடியாது உண்மை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow